2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜப்பான் யுவதியை சீரழித்தவருக்கு வலைவீச்சு

Menaka Mookandi   / 2016 ஏப்ரல் 29 , மு.ப. 09:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

அநுராதபுரம், ஹரிச்சந்திர வீதியிலுள்ள வீடொன்றில் தங்கியிருந்த ஜப்பான் நாட்டு யுவதியொருவரை வன்புணர்வுக்கு உட்படுத்திவிட்டு தலைமறைவாகிய சந்தேகநபர் ஒருவரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

ஜப்பானின் அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்படும் வேலைத்திட்டமொன்றை மேற்படி யுவதியே மேற்கொண்டு வருகின்றார். அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதலே மேற்படி வீட்டில்தான் தங்கியிருந்துள்ளார்.

குறித்த வீட்டின் உரிமையாளர்கள் இல்லாத சமயத்தில் வீட்டுக்குள் நுழைந்துள்ள மேற்படி சந்தேகநபர், மேற்படி ஜப்பான் யுவதியை அச்சுறுத்திவிட்டு வன்புணர்வுக்கு உட்படுத்திச் சென்றுள்ளார் என பொலிஸ் விசாணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X