Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Mithuna / 2023 டிசெம்பர் 11 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ 2019 ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. மேலும் மாநிலத்தை இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்தது.
சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இந்த வழக்கு விசாரணை முடிந்து திங்கட்கிழமை (11) தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் மூன்று விதமான தீர்ப்புகள் வழங்கப்பட்டன. தலைமை நீதிபதி சந்திரசூட் ஒரு தீர்ப்பு வழங்கினார். பி.ஆர்.கவாய், சூர்யகாந்த் ஆகியோர் ஒரு தீர்ப்பு வழங்கினர். நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சஞ்சீவ் கண்ணா ஆகியோர் ஒரு தீர்ப்புகள் வழங்கினர்.
மூன்று தீர்ப்புகள் வழங்கப்பட்டாலும் ஒரே தீர்ப்பாக எடுத்துக் கொள்ள வேண்டும் என தலைமை நீதிபதி தெரிவித்தார். பின்னர் ஒட்டுமொத்தமாக சிறப்பு அந்தஸ்து சட்டப்பிரிவு 370 ரத்து செல்லும் என தீர்ப்பு வழங்கப்பட்டது.
தீர்ப்பின்போது தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் கூறியதாகவது:-
1. ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய சட்டப்பிரிவு 370 தற்காலிகமானது.
2. ஜம்மு காஷ்மீர் மாநிலம் மற்ற மாநிலங்களில் இருந்து வேறுபட்ட இறையாண்மையை கொண்டிருக்கவில்லை.
3. இந்தியா உடன் இணைந்தபோது இறையாண்மையின் ஒரு பகுதியை தக்க வைத்துக்கொள்வில்லை.
4. ஜனாதிபதி ஆட்சி நடைபெறும்போது மாற்ற முடியாத அதிகாரத்தை செயல்படுத்தும் நடவடிக்கையை எடுக்க முடியாது என்ற வாதத்தை ஏற்க முடியாது.
5. மத்திய அரசிற்கான அரசியலமைப்பு சட்டம் அனைத்தும் ஜம்மு-காஷ்மீருக்கும் பொருந்தும்.
6. குடியரசுத் தலைவர் ஆட்சி அங்கு இருக்கும்போது ஒன்றிய அரசு எடுக்கும் முடிவுகளை கேள்விக்கு உள்ளாக்க முடியாது.
7. காஷ்மீருக்கு தனி ஆட்சி உரிமை கிடையாது.
8. இந்திய அரசியலமைப்போடு இணைந்ததுதான் காஷ்மீர் அரசியலமைப்பு.
மேலும், ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டெம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்த வேண்டும் எனவும் தீர்ப்பளித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
56 minute ago
2 hours ago