Editorial / 2018 ஜனவரி 12 , மு.ப. 10:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழீழ விடுதலைப் புலிகளின் தற்கொலைத் தாக்குதலில் பலியான, ரஷ்யாவுக்கான முன்னாள் தூதுவரும் வடமத்திய மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவருமான மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் தொகுப்புரைகளுக்குத் திகதி குறிக்கப்பட்டுள்ளது.
இத்தாக்குதலில் 60க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்தனர்.
வழக்கின் முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதியின் சார்பில், இருதரப்புகளின் தொகுப்புரைகள், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியன்று முன்வைக்குமாறு, மேல் நீதிமன்ற நீதிபதி ரேமா சுவர்ணாதிபதி, நேற்று (11) கட்டளையிட்டார்.
வழக்குக்கான முறைப்பாட்டாளர் மற்றும் பிரதிவாதிகள் உள்ளிட்ட சகலரினதும் சாட்சிகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதன் பின்னரே, நீதிபதி மேற்கண்டவாறு கட்டளையிட்டார்.
இந்நிலையில், இந்தத் தற்கொலைத் தாக்குதல் சம்பவத்தின் பிரதான சந்தேகநபரான உமார் ஹபிதாபி என்பவர், நீதிபதியின் உத்தரவின் பேரில், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிவரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த வழக்கு, விசேட வழக்காகக் கருதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது என்பதுடன், மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா உள்ளிட்ட 31 படுகொலைச் செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், அநுராதபுரம் விசேட மேல் நீதிமன்றத்தில், அதிகுற்றச்சாட்டு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு, 5 வருடங்கள் கடந்துள்ள நிலையில், சந்தேகநபர் தொடர்ச்சியாகவே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
37 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
5 hours ago
9 hours ago
9 hours ago