2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

ஜா- எல துப்பாக்கிச் சூட்டு சம்பவம் சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்

Editorial   / 2018 ஒக்டோபர் 08 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜா எல- ரத்தொழுகம வீடமைப்புத் தொகுதிக்கு அருகில், நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய சந்தேகநபரொருவர் அடையாளங் காணப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

எனவே அடையாளங் காணப்பட்டுள்ள, சந்தேகநபரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக ரத்தொழுகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்றிரவு 9 மணியளவில் காரொன்றில் வந்த நபரொருவர் குறித்த வீடமைப்புத் தொகுதிக்கு அருகில் வைத்து, காரிலிருந்து இறங்கி, நின்றுக்கொண்டிருந்த போ​து, மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இவர் மீது துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, காயமடைந்த 36 வயதுடைய நபர், கொலை ஒன்றுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபரென்றும், பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .