2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

ஜூலை 20இல் தண்டனை

Thipaan   / 2017 ஜூலை 07 , மு.ப. 05:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

முன்னாள் பிரதியமைச்சர் சரண குணவர்தன தனக்கெதிரான இருவழக்குகளில், தனக்கு எதிராகச் சுமத்தப்பட்ட குற்றச்சாட்களை ஒப்புக்கொண்டதையடுத்து, அக்குற்றத்துக்கான தண்டனை, ஜூலை 20ஆம் திகதி வழங்கப்படும் என, கொழும்பு பிரதான நீதிமன்ற நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (06) உத்தரவிட்டார். 

தேசிய லொத்தர் சபையின் தலைவராக அவர் இருந்த போது, 2006, 2007ஆம் ஆண்டு காலப்பகுதிக்கான சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்களைக் கையளிக்கவில்லை, என, இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான சாத்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவால் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

அந்த வழக்கு விசாரணை, கொழும்பு நீதவான் நீதிமன்ற பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது. 

இதன்போது, தனது சேவை பெறுநர், 2006, 2007ஆம் ஆண்டுகளில் சொத்து விவரங்களை வெளியிடத்தவறியமையை ஒத்துக்கொள்கிறார் என, அவர் சார்பில் ஆஜரான சட்டத்தரணியான அனில் சில்வா, மன்றில் அறிவித்தார். 

இதனையடுத்து, அவருடைய கைவிரல் அடையாளங்களைப் பெறுமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்ட நீதவான், இந்தக் குற்றத்துக்கான தண்டனை, ஜூலை 20ஆம் திகதி வழங்கப்படும் எனவும் உத்தரவிட்டார். 

1,000  ரூபாயே அபராதம்

1975ஆம் ஆண்டின் சொத்துகள் மற்றும் பொறுப்புகள் சட்டத்தின் 9ஆம் பிரிவின் 63ஆம் உறுப்புரைக்கு அமைய குற்றவாளிக்கு, 1,000 ரூபாய்க்கு மேற்படாத அபராதம் அல்லது ஒருவருடத்துக்கு மேற்படாத சிறைத்தண்டனை அல்லது அபராதமும் சிறைத்தண்டனையும் வழங்கப்படும்.  

2011, 2012, 2013ஆகிய மூன்று ஆண்டுகளுக்கான சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்களைக் கையளிக்காத குற்றச்சாட்டை ஒத்துக்கொண்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு, 3000 ரூபாய் தண்டப்பணம் விதித்து, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்ற மேலதிக நீதவான் அருணி ஆட்டிகல, கடந்த ஏப்ரல் மாதம் 06ஆம் திகதி உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X