Editorial / 2020 ஜூலை 29 , பி.ப. 01:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஜோர்தானில் தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் மீது, அந்நாட்டு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில், முறையாக விசாரணைகளை இலங்கை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என, மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துநெத்தி, ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை பணியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை வன்மையாக கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தொழில்களை இழந்த இலங்கை பணியாளர்கள் முன்னெடுத்த ஆர்ப்பாட்டத்தின் மீது, அந்நாட்டு பொலிஸாரால் நேற்று முன்தினம் (27) தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025