2025 ஓகஸ்ட் 26, செவ்வாய்க்கிழமை

ஜோடி சடலம் மீட்பு: இரட்டைப்படுகொலை

Kanagaraj   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

எல்பிட்டிய, பிடுவல பிரதேசத்தில் அடஹேலன நீர்வீழ்ச்சிக்கு அண்மையிலிருந்து சடலங்களாக மீட்கப்பட்ட இருவரும் தற்கொலை செய்துகொள்ளவில்லை என்றும் அவ்விருவம் கொலைச்செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விருவரும் டிசெம்பர் மாதம் 11ஆம் திகதி காலை 4 மணிக்கும் டிசெம்பர் மாதம் 13ஆம் திகதி பிற்பகல் 11 மணிக்கும் இடைப்பட்ட காலத்தில் படுகொலைச்செய்யப்பட்டுள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

நவத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞன் (இராணுவ வீரர்) மற்றும் 18 வயதான யுவதியின் சடலங்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை (13) மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிடுவல பிரதேசத்தில் கைவிடப்பட்டிருந்த நிலையில் மோட்டார் சைக்கிளொன்று, நேற்று கண்டதைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

இச்சடலங்களுக்கு அருகில் இருந்து விசப் போத்தல் மீட்கப்பட்டது. எனினும், அவ்விருவரும் தற்கொலைச் செய்துகொண்டதாக காண்பிப்பதற்காகவே இந்த விசப்போத்தல் அவ்விடத்தில் வீசப்பட்டுள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X