2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

ஜெயகுமாரி மீண்டும் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 03 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்த பாலேந்திரன் ஜெயகுமாரி, நேற்று புதன்கிழமை (03) மீண்டும் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று முன்தினம் (01) அவருக்கான இரண்டாவது பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில், கெப்பற்றிக்கொல்லாவ நீதவான் நீதிமன்றத்தில் நேற்று அவர் ஆஜரானார். 

அங்கிருந்து, அவருக்கான வழக்கு பதவிய நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெறுமென அறிவிக்கப்பட்ட நிலையில், அங்கு சென்ற அவருக்கு, பிணை வழங்கப்படுவது மறுக்கப்படு அவர் கைது செய்யப்பட்டார்.

அவரைத் தொடர்ந்தும் பிணையில் விடுவிக்க பொலிஸார் மறுப்புத் தெரிவித்த போதிலும், அதை மீறி அவருக்கு, 25,000 ரூபாய் ரொக்கப் பிணையும் 100,000 ரூபாய் பெறுமதியிலான சரீரப் பிணையும் வழங்கப்பட்டது. 

எனினும், சரீரப் பிணையில் கைச்சாத்திடுவோர், அவர்களது பகுதி கிராம சேவகர்களால் உறுதிப்படுத்தப்பட வேண்டுமென்ற நீதவானது நிபந்தனையை பூர்த்தி செய்யாத காரணத்தால், ஜெயகுமாரியினது பிணை நிராகரிக்கப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X