2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

ஜேர்மன் பெண்ணின் 28 வருடகால சுதந்திரத் தாகம்

Gavitha   / 2016 பெப்ரவரி 05 , மு.ப. 03:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் சுதந்திரதின வைபவத்தில் கலந்துகொள்வதற்காக இந்நாட்டுக்கு, ஜேர்மன் நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவர் (76)  கடந்த 28 வருடங்களாக வந்து செல்கிறார்.

பெந்தோட்டையிலுள்ள ஹோட்டலொன்றில் நடைபெறும் வைபவத்திலேயே அவர் பங்கேற்கின்றார். ஹெலன் கோல் என்ற பெயருடைய அந்தப் பெண், நரம்பு நோயினால் 18 வயது முதல் பாதிக்கப்பட்டுள்ளதுடன் கடந்த பல வருடங்களாக நடக்க முடியாத நிலைக்கு ஆளாகியுள்ளார்.

தற்போது சக்கர கதிரையில் இருந்தபடி தனது தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் அவர்,  இலங்கைக்கு வரும்போதும் விசேட சக்கரக் கதிரையையும் கொண்டு வருகிறார்.

1989ஆம் ஆண்டு முதல் ஒவ்வருடமும் இலங்கைக்கு வரும் இவர், நம்;நாட்டில் சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக ஜனவரி மாத கடைசி வாரத்தில் வருவதுடன். பெந்தோட்டையிலுள்ள உல்லாச விடுதியில் தங்கியிருக்கின்றார்.

அத்துடன், இந்த ஹோட்டலில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுடன் இணைந்து வருடாந்தம் பெப்ரவரி 4ஆம் திகதி நடைபெறும் சுதந்திர தின நிகழ்வுகளில் தவறாது கலந்துகொண்டு வருகின்றார்.

இம்முறையும் அந்த ஹோட்டலில் நடைபெற்ற சுதந்திர தின நிகழ்வில் கலந்துகொள்ள ஹெலன் தவறவில்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X