2025 ஜூலை 05, சனிக்கிழமை

ஞானசாரருக்கு பொதுமன்னிப்பு?

Editorial   / 2019 ஜனவரி 10 , பி.ப. 03:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரரை, சுதந்திர தினமான எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி, பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுதலை செய்யுமாறு, பெவதிஹட அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டில் இனம், மதம் தொடர்பில் அவர் ஆற்றியுள்ள பங்களிப்பை கருத்திற்கொண்டு இந்த தீர்மானத்தை எடுக்குமாறு, குறித்த அமைப்பின் தலைவர் முருத்தெட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

நாரஹன்பிட்டி அப்யராம விகாரையில் இன்று (10) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர்,

நாட்டுக்கு பாதகமாக கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரனின் நாடாளுமன்ற உறுப்புரிமையை இரத்துச் செய்வதற்கு பதிலாக, கல்வி இராஜாங்க அமைச்சுப் பதவி வழங்கப்பட்டுள்ளதாகவும், ஞானசாரரை விடுதலை செய்யாவிட்டால் எதிர்வரும் காலங்களில் பாரிய செயற்பாடுகளில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .