2026 மே 10, ஞாயிற்றுக்கிழமை

ஞானசார தேரரருக்கு எதிரான வழக்கு; சட்டமா அதிபருக்கு மீள் நினைவூட்டல்

Editorial   / 2019 ஓகஸ்ட் 05 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரருக்கு எதிரான வழக்கு தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனை வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி லங்கா ஜயரத்ன, இந்த மீள் நினைவூட்டல் உத்தவினை இன்று பிறப்பித்தார்.

இஸ்லாம் மார்க்கம் மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் ஞானசார தேரர் கருத்து வெளியிட்டதாக தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில் இதுவரை சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனை கிடைக்கப்பெறவில்லை என, இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் அதிகாரிகள் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.

இதனையடுத்து, குறித்த வழக்கு தொடர்பில் ஆலோசனை வழங்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு நினைவுப்படுத்தல் உத்தரவொன்றை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

பொலன்னறுவை பிரதேசத்தில் இடம்பெற்ற இரண்டு கூட்டங்களில், வெளியிடப்பட்ட கருத்துகள், இஸ்லாம் மார்க்கம் மற்றும் அல்குர்ஆன் ஆகியவற்றுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தும் வகையில் அமைந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபூர் ரஹ்மானால் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய ஞானசார தேரருக்கு எதிரான இந்த வழக்கினை குற்றப்புலனாய்வு பிரிவினர் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .