2025 ஜூலை 02, புதன்கிழமை

டிக் டாக் நண்பியால் இளைஞனுக்கு நடந்த விபரீதம்

Freelancer   / 2025 ஜூலை 01 , மு.ப. 09:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

டிக் டாக்கில் மூலம் இளைஞன் ஒருவரிடம் நட்பாக பழகி, அவரிடமிருந்து பெறுமதியான பொருட்களை கொள்ளையடித்து, இளைஞரை தாக்கிய சம்பவத்தில் இளம் யுவதி உட்பட ஐவர் வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்களில் குறித்த யுவதியின் காதலன் மற்றும் நெருங்கிய நண்பர் அடங்குவதாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

சம்பவத்தில் குறித்த இளைஞனை தாக்கி கும்பல் அவரிடமிருந்து, 3,000 ரூபாய் பணம், தங்க மோதிரம், 150,000 ருபாய் மதிப்புள்ள கைத்தொலைபேசி, மற்றும் அவரது மோட்டார் சைக்கிளில் இருந்த தலைக்கவசத்தை கொள்ளையடித்ததாக பொலிஸார் தெரிவித்தனர். 

தாக்குதலில் காயமடைந்த இளைஞர் சிகிச்சைக்காக தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 21 வயது இளைஞர், சில நாட்களுக்கு முன்பு டிக் டாக் மூலம் 19 வயது யுவதியுடன் நட்பு கொண்டதாகக் கூறப்படுகிறது.

நண்பர்களான பிறகு, முதல் சந்திப்பு தெஹிவளை கடற்கரையில் நடந்தது. இரண்டு நாட்களுக்குப் பிறகு, இரண்டாவது சந்திப்பு காலி மோதரவில் நடந்தது, அங்கு இருவரும் ஒரு இசை நிகழ்ச்சியைப் பார்த்திருந்தனர். 

எனினும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 19 முதல் 20 வயதுக்குட்பட்ட ரஜ மகா விஹார மாவத்தை மிரிஹான, எதுல் கோட்டே, அங்கொட, ராஜகிரிய மற்றும் கலபலுவாவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள்.

சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .