Freelancer / 2026 பெப்ரவரி 24 , மு.ப. 08:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
டித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட இலங்கையர்களுக்கு உதவும் வகையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான முன்னுரிமைகள் திட்டத்தின் கீழ் இதுவரை 2 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பயனடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை அரசாங்கத்தின் வேண்டுகோளுக்கிணங்க, 2025 டிசம்பர் முதல் 2026 ஏப்ரல் வரை மிகவும் பாதிக்கப்படக்கூடிய 6 லட்சத்து 58 ஆயிரம் பேருக்கு உதவுவதை இத்திட்டம் இலக்காகக் கொண்டுள்ளது.
இதுவரை உதவி பெற்றவர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள் என்பதுடன், 4,400 மாற்றுத்திறனாளிகளும் இதில் உள்ளடங்குகின்றனர்.
25 மாவட்டங்களில் 69 பங்காளர் அமைப்புகளின் ஊடாக இந்த நிவாரணப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.
இடம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள போதிலும், சுமார் 1 லட்சத்து 55 ஆயிரம் பேர் இன்னமும் உறவினர் வீடுகளிலும் ஏனைய இடங்களிலும் தங்கியுள்ளனர். (a)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago