Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 மே 02 , பி.ப. 08:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
சமூக ஊடக தளமான டிக்டாக்கிற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் தரவு பாதுகாப்பு ஆணையமான அயர்லாந்தின் தரவு பாதுகாப்பு ஆணையம் 530 மில்லியன் யூரோக்கள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) அபராதம் விதித்துள்ளது.
ஐரோப்பிய பயனர்களின் தனிப்பட்ட தரவுகளை சட்டவிரோதமாக சீனாவிற்கு மாற்றியதாகவும், அவை சீன அதிகாரிகளின் அணுகலில் இருந்து பாதுகாக்கப்படவில்லை என உறுதிப்படுத்தத் தவறியதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இது ஐரோப்பிய ஒன்றியத்தின் பொது தரவு பாதுகாப்பு ஒழுங்குமுறை விதிகளை மீறியதற்காக விதிக்கப்பட்ட மூன்றாவது பெரிய அபராதமாகும்.
2021இல் தொடங்கிய விசாரணையில், டிக்டொக் தரவுகளை சீன சேவையகங்களில் சேமித்ததை ஒப்புக்கொண்டது. 485 மில்லியன் யூரோ தரவு மாற்ற மீறலுக்காகவும், 45 மில்லியன் யூரோ வெளிப்படைத்தன்மை இன்மைக்காகவும் விதிக்கப்பட்டது.
டிக்டொக் ஆறு மாதங்களுக்குள் GDPR விதிகளுக்கு இணங்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது. R
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .