Ilango Bharathy / 2021 ஜூலை 15 , மு.ப. 01:45 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அமெரிக்க டொலர், பிரச்சினையிலிருந்து இருந்து அரசாங்கத்தால் தலையை தூக்கிக்கொள்ள முடியவில்லையெனத் தெரிவித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் எம்.பியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அரசாங்கம்
டொலரை விழுங்கிவிட்டது என்றும் தெரிவித்துள்ளார்.
“டொலர், கைவசம் இன்மையால், கொழும்பு துறைமுகத்துக்கு வந்திருக்கும் எரிபொருள் அடங்கிய கப்பலும் சிக்கிக்கொண்டுள்ளது” என்றும் தெரிவித்துள்ளார். எரிபொருள்களுடன் வந்திருக்கும் அந்தக் கப்பலுக்கு டொலரை செலுத்தாவிடின், எரிபொருள்களை எடுத்துக்கொண்டு திரும்பிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
இலங்கை தற்போது அந்நிய செலாவணி பற்றாக்குறையை மையமாகக் கொண்ட பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது. தற்போது நமது அந்நிய செலாவணி இருப்பு 4 பில்லியன் டொலர்களாகும். ஆண்டின் நடுப்பகுதியில் 1 பில்லியன் டொலர் பத்திரக் கடனை
செலுத்தவேண்டும். அதனை செலுத்திய பின்னர், கருவூலத்தில் 3 பில்லியன் டொலர் இருப்பு மட்டுமே உள்ளது என்றார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
3 hours ago