2025 ஜூலை 07, திங்கட்கிழமை

’டொப்-20’ கோவையை கையளிக்க முஸ்தீபு

Editorial   / 2019 ஜனவரி 28 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒன்றிணைந்த எதிரணி, “டொப்-20” எனும் கோவையை ஜனாதிபதி ஆணைக்குழுவிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ரணில் விக்கிரமசிங்க, பிரதமராகப் பதவிவகித்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 15ஆம் திகதியிலிருந்து 2018 டிசெம்பர் 31ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடி, தொடர்பில் நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவிடமே, இந்த அறிக்கையை, ஒன்றிணைந்த எதிரணி கையளிக்கவுள்ளது. 

இது தொடர்பிலான விவரங்களை, ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்றக் குழுத்தலைவர் தினேஸ் குணவர்தன எம்.பி, விரைவில் அம்பலப்படுத்துவார் என்றும் அறியமுடிகின்றது.  

ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் உபாலி அபேரத்னவை தவிசாளராகக் கொண்டு நியமிக்கப்பட்டுள்ள மேற்படி ஜனாதிபதி ஆணைக்குழு தொடர்பிலான விசேட வர்த்தமானி அறிவித்தல், கடந்த 14ஆம் திகதி வெளியிடப்பட்டிருந்தது.  

கடந்த மூன்றாண்டு காலப்பகுதியில், அரச நிறுவனங்களில் இடம்பெற்ற ஊழல், மோசடி, குற்றவியல் ரீதியான மீறுகை உள்ளிட்ட அரச வருமானத்துக்குப் பாரதூரமான நட்டங்களை ஏற்படுத்திய சம்பவங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கே, இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .