2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

டொல்பீன்களை பிடித்தால் கைதுசெய்யப்படுவீர்கள்

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 10 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

டொல்பீன்களைப் பிடிப்பதைத் தடைசெய்வதற்கும் அவ்வாறு பிடிப்பவர்களை உடனடியாகக் கைதுசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறும், கடற்றொழில் மற்றும் நீரக வளமூல அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவிடம், இலங்கைக் கடற்படை மற்றும் தேசிய கரையோரப் பாதுகாப்புப் பிரிவு வேண்டுகோள் விடுத்துள்ளன.

டொல்பீன் ரக மீன்களை வேட்டையாடுவதை மீனவர்கள் உடனடியாக நிறுத்த வேண்டும். அவ்வாறல்லாத பட்சத்தில், அவர்களைக் கைதுசெய்வதற்கான நடவடிக்கைகளை எடுப்பதுடன், அவர்களுக்கு வழங்கப்பட்ட மீன்பிடிப்பதற்கான அனுமதி அட்டையையும் தடைசெய்யுமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

டொல்பீன்கள், பெரும்பாலும் மாத்தறைப் பகுதிகளில் சட்டவிரோதமான முறையில் பிடிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .