Editorial / 2021 ஜனவரி 07 , மு.ப. 02:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பா.நிரோஸ்
கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழப்போரை தகனம் செய்யவேண்டுமென வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் சட்டவிரோதமானது. ஆகையால், அதை இரத்துச் செய்யவேண்டுமென கேட்டுக்கொண்டுள்ள ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். அத்தாவுல்லா, அதற்கெதிராக தனிநபர் பிரேரணையைக் கொண்டுவர உள்ளதாகவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று (06) நடைபெற்ற தண்டனைச் சட்டக்கோவை, சான்று சட்டமூலம், பிணை சட்டமூலங்கள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்த அவர், பாராளுமன்றம் கூடாதபோது, வர்த்தமானியொன்று திருத்தி வெளியிடப்பட்டது எவ்வாறு என்றும் வினவினார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர்,
''கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை எரிப்பதா அல்லது புதைப்பதா என்கிற பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எனவே, இதை அரசியல் ரீதியாக அணுகாது, நிபுணர்கள் குழுவின் அறிக்கையின்படி இதைக் கையாள வேண்டுமென ஜனாதிபதி, பிரதமர் தீர்மானித்திருந்தனர்.
கொரோனா வைரஸால் உயிரிழக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கான வழிகாட்டல்களை நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதனை ஜனாதிபதி, முன்னாள் ஜனாதிபதி ஆகியோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்களும் இதை ஏற்றுக்கொண்டுள்ளனர்' என்றார்.
தனிமைப்படுத்தல் சட்டத்தில் அடக்கம் செய்ய முடியுமென தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடாளுமன்றத்தைக் கூட்டாது, கொரோனா வைரஸால் உயிரிழப்போரை எரிக்க வேண்டுமென வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்தமையானது, நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரையும் ஏமாற்றியா என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இந்த வர்த்தமானி அறிவித்தல் சட்டத்துக்கும், பாராளுமன்ற கலாசாரத்துக்கும் எதிரானது என்பதால்இ அதனை உடனடியாக இரத்துச் செய்ய வேண்டும்'' என்றார்.
21 Apr 2026
21 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Apr 2026
21 Apr 2026