Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 05, சனிக்கிழமை
Editorial / 2018 டிசெம்பர் 26 , மு.ப. 10:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
தங்காலை – குடாவெல்ல பிரதேசத்தில் நேற்று (25) இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தின் பின்னர், அங்கு பொலிஸாரால் வைக்கப்பட்டிருந்த வீதி தடையை மீறி பயணித்த வான் ஒன்றின் மீது, பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளனர்.
இன்று (26) அதிகாலை, குடாவெல்ல பகுதியில் பொலிஸாரால் வைக்கப்பட்டிருந்த வீதி தடையை மீறி வான் ஒன்று பயணஞ்செய்த நிலையில், அதனை நிறுத்துமாறு கட்டளை விதித்தும் அதனை பொருட்படுத்தாது குறித்த வான் பயணித்தமையால், பொலிஸ் அதிகாரியொருவரால், வானின் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், வான் தப்பிச் சென்றுள்ளதாகவும், பொலிஸார் குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago