2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தாஜுதீன் கொலை குறித்து அதிர்ச்சி செய்தி

Freelancer   / 2025 செப்டெம்பர் 30 , பி.ப. 06:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரக்பி வீரர் வசீம் தாஜுதீன் படுகொலை தொடர்பில் அதிர்ச்சி செய்தி ஒன்று வெளியாகி உள்ளது.

இதன்படி, ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்துள்ளார்.

இந்த தகவலை பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார். 

இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X