2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தந்தை கவனிக்கவில்லை: மகன் முறைப்பாடு

Gavitha   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தங்கைகளையும் தம்பிகளையும், தனது தந்தை கவனித்துக்கொள்வதில்லை என்று தெரிவித்து, 16 வயதுடைய பாடசாலை மாணவனொருவர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ள சம்பவம், கெபத்திகொல்லாவ பகுதியில் இடம்பெற்றுள்ளது.

கெபத்திகொல்லாவ, கனுகஹாவௌ பகுதிiயைச் சேர்ந்த பாடசாலை மாணவனே இந்த முறைப்பாட்டை பதிவு செய்துள்ளார்.

தனது தாய், வெளிநாட்டில் பணிபுரிந்து வருவதன் காரணத்தினால், தனது இரண்டு தங்கைகளையும் இரண்டு தம்பி மார்களையும், தந்தை ஒழுங்காக கவனிப்பதில்லை என்று அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், சகோதர சகோதரிகளுக்கு ஒழுங்கான உணவையோ அல்லது குடிநீரையோ தனது தந்தை வழங்குவதில்லை என்றும் இதனால் எங்களது பாடசாலை வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X