2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

தென்னகோன் பிணையில் விடுதலை

Simrith   / 2025 ஓகஸ்ட் 27 , பி.ப. 01:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மே 9, 2022 அன்று காலி முகத்திடலில் அமைதிப் போராட்டக்காரர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட முன்னாள் பொலிஸ்மா அதிபர் (டிஐஜி) தேசபந்து தென்னகோன் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கொழும்பு கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, தலா 1 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளுடன் அவருக்கு பிணை வழங்கியதுடன், பயணத் தடையையும் விதித்தார்.

தும்பரா சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த தென்னக்கோன், ஸூம் மூலம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இந்த வழக்கில் தென்னகோன் 33வது சந்தேக நபர் அல்ல, 37வது சந்தேக நபர் என்றும், 33வது சந்தேக நபர் லியானாட் மெண்டிஸ் என்றும் நீதவான் மேலும் தெளிவுபடுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .