2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

தனமல்வில துப்பாக்கிச் சூடு: மூவர் கைது

Editorial   / 2019 பெப்ரவரி 16 , பி.ப. 02:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

தனமல்வில பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், மூன்று சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த நான்கு நபர்களால், கடந்த 10ஆம் திகதி, தனமல்வில பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தார். 

இந்நிலையில், இது தொடர்புடைய விசாரணைகளை, பொலிஸார் மேற்கொண்டு வந்த நிலையிலேயே, சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட மூன்று துப்பாக்கிகள், இரண்டு மோட்டார் சைக்கிள்களுடன் சந்தேகநபர்கள் கைதாகியுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களில் தனமல்வில பிரதேசத்தைச் ​சேர்ந்த 28, 25 வயதுடைய சகோதரர்கள் இருவரும், 27 வயதுடைய மற்றொரு நபரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .