2025 ஜூலை 23, புதன்கிழமை

தனியார் துறை சம்பளம் ரூ.30,000 ஆக அதிகரிப்பு

Freelancer   / 2025 ஜூலை 23 , மு.ப. 01:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனியார் துறை ஊழியர்களின் ஆகக் குறைந்த அடிப்படை சம்பளமாக இருந்த 17,500 ரூபாவை கடந்த ஏப்ரல் மாதம் முதல் 27,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் அந்த தொகை 30,000 ரூபாவாக அதிகரிக்கப்படும் என்றும் தொழில் அமைச்சர் பேராசிரியர் அனில் ஜயந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (22)  அன்று நடைபெற்ற வேலையாட்சகளின் வரவு-செலவுத் திட்ட நிவாரணப்படி (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வேலையாட்களின் குறைந்தபட்ச வேதனம் தொடர்பான (திருத்தச்) சட்டமூலம் மீதான விவாதத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே இவ்வாறு குறிப்பிட்டார்.

மேலும் அமைச்சர்  தெரிவிக்கையில், 2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் அரச துறையினருக்கான சம்பள அதிகரிப்பு செய்யப்பட்டது.  தனியார் துறையினரின் அடிப்படை சம்பளத்தை 30,000 ரூபாய் வரையில் அதிகரிக்க கலந்துரையாடினோம்.   இதன்படி, 27,000 ரூபாய் குறைந்த பட்ச சம்பளமாக ஏப்ரல் முதல் அமுலுக்கு வரும் வகையிலும், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் அதனை 30,000 ரூபாய் வரையில் அதிகரிக்கவும் இணக்கம் காணப்பட்டுள்ளது.
  இதேவேளை, 30,000 ரூபாய்  என்பது தற்போதைய பணவீக்க நிலைமையில் போதுமானது அல்ல. சாதாரண வாழ்வுக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான தொகை அவசியமாகும். எவ்வாறாயினும் பொருளாதாரத்தை நிலையாக்கி, உற்பத்திகளைப் பெருக்கியே அதனைச் செய்ய முடியும்  என்றார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .