2025 நவம்பர் 21, வெள்ளிக்கிழமை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 577 பேர் கைது

J.A. George   / 2021 செப்டெம்பர் 03 , மு.ப. 09:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 577 பேர் கடந்த 24 மணிநேரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 63,908 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, நேற்று மேல்மாகாணத்திற்குள் நுழையும் மற்றும் அங்கிருந்து வெளியேறும் பகுதிகளில்  வானங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு அமைக்கப்பட்டுள்ள 13 சோதனை சாவடிகளில், 994 வாகனங்களில் பயணித்த 1,796 நபர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X