2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

தனியார் பஸ் சாரதிகள், நடத்துனர்களுக்கு ரூ. 5,000 கொடுப்பனவு

Editorial   / 2020 ஏப்ரல் 09 , பி.ப. 01:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்று காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள தனியார் பஸ் சாரதிகள் மற்றும் நடத்துனர்களுக்கு, 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவொன்றை வழங்க, ஜனாதிபதி இணங்கியுள்ளாரென, போக்குவரத்து மற்றும் நெஞ்சாலைகள் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொவிட்-19 காரணமாக, தங்களுக்கான வாழ்வாதாரத்தை இழந்து, இக்கட்டான சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள மேற்படி சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு, நிலையான வருமான வழியொன்று காணப்படாததால், அவர்களுக்கு அரசாங்கத்தால் இந்தக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதாகவும், அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதன்படி, தனியாஸ் பஸ்களின் சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கு, இந்த 5 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு கிடைக்கப்பெறுமென, அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .