2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தன்னுயிரை மாய்க்க ரஞ்சன் முயற்சி?

Editorial   / 2021 மே 07 , பி.ப. 01:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய மக்கள் சக்தியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான ரஞ்சன் ராமநாயக்க, தன்னுயிரை மாய்த்துக்கொள்வதற்கு முயன்றார் என சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருக்கும் செய்தியை அவர், மறுத்துள்ளார்.

ரஞ்சன் ராமநாயக்க, தன்னுடைய முகப்புத்தகத்தில், சமூக வலைத்தளங்களின் செய்தியை மறுத்துள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்தார் என குற்றஞ்சாட்டப்பட்டிருந்த ரஞ்சன் ராமநாயக்கவை குற்றவாளியாக இனங்கண்ட நீதிமன்றம் அவருக்கு நான்கு வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனையை விதித்தது.

அதன்பின்னர், அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலையில் அவர் அடைக்கப்பட்டார்.

பாராளுமன்ற அமர்வுகளுக்கு தொடர்ச்சியாக மூன்றுமாதகாலம் வருகைதராமையால், அவருடைய பாராளுமன்ற ஆசனமும் வெற்றிடமானது. அதற்கு, எதிர்க்கட்சியினர் கடுமையான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர்.

எனினும், ரஞ்சனின் எம்.பி பதவி வெற்றிடத்துக்கு, ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த அஜித் மன்னபெரும நியமிக்கப்பட்டார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X