2021 மே 14, வெள்ளிக்கிழமை

’’தனி வழி செல்வது பற்றி சிந்திக்கவில்லை’’

R.Maheshwary   / 2021 ஏப்ரல் 20 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தனிவழி செல்வது குறித்து நாம் எப்போதும் சிந்தித்ததில்லை என தெரிவித்த பத்திக், கைத்தறி துணிகள் மற்றும் உள்நாட்டு ஆடை உற்பத்தி இராஜாங்க  அமைச்சர் தயாசிறி ஜயசேகர, ஆனால் அரசாங்கத்துக்குள் இருந்தவாறே, எமது கட்சியை பலப்படுத்தி முன்னோக்கி செல்​வோம். ஏனெனில் அரசாங்கத்தையும் ஜனாதிபதியையும் நியமித்தது நாமே என்றார்.

நேற்று (18) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னர், ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், அனைத்து கட்சிகளும் அரசாங்கத்தையும் பலப்படுத்திக்கொண்டு, தமது கட்சிகளையும் பலப்படுத்திக் கொண்டால் தானே முன்​னோக்கி பயணிக்க முடியும். எனவே, இந்த அரசாங்கத்துக்கு எதிராக எவ்வித முரண்பாடுகளும் எம்மிடம் இல்லை. இருக்கும் பிரச்சினைகளை நாம் கலந்துரையாடல்கள் மூலம் தீர்த்துக்கொண்டுமுன்னோக்கி செல்வோம் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .