Janu / 2026 மே 05 , பி.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம், அட்டவில்லு பகுதியில் அமைந்துள்ள முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபர் (DIG) ஒருவருக்கு சொந்தமானது என கூறப்படும் காணியொன்றிலிருந்து, துப்பாக்கி ரவைகள், சிறுத்தை தோலினால் செய்யப்பட்ட உருவம் மற்றும் புள்ளிமான் தோல் உள்ளிட்ட பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விமானப்படை புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, கருவலகஸ்வெவ, ரிடிகல மற்றும் குருநாகல் வனவிலங்கு அதிகாரிகளும், புத்தளம் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து செவ்வாய்க்கிழமை (05) முன்னெடுத்த சுற்றிவளைப்பின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த சுற்றிவளைப்பின் போது, குறித்த காணியை முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகை அடிப்படையில் பெற்று விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தான் இந்த காணியை விவசாயத்திற்காகவே முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடமிருந்து குத்தகைக்கு எடுத்ததாக சந்தேகநபர் வாக்குமூலம் அளித்துள்ளதாக வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வனவிலங்கு அதிகாரிகளும் பொலிஸாரும் இணைந்து முன்னெடுத்து வருகின்றனர்.


2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago