R.Maheshwary / 2021 ஜூலை 25 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் திணைக்களத்தின் வருமானத்தை அதிகரிப்பதற்காக, புதிய வேலைத்திட்டமொன்றை செயற்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதன் முதற்கட்டமாக வாகனங்களுக்கான இலக்கத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க தீர்மானித்துள்ளதாகவும் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார்.
தபால் சேவையின் வருடாந்த வருமானம் 9 பில்லியன்கள் மாத்திரமே கிடைப்பதாகவும் 14 பில்லியன் ரூபாய் செலவு ஏற்படுவதாகவும் சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், 5 பில்லியன் ரூபாயை திறைசேறிக்கு செலுத்த வேண்டியிருப்பதாகவும் தெரிவித்தார்.
எனவே தபால் சேவையின் வருமானத்தை அதிகரிக்கும் திட்டத்தின் முதற்கட்டமாகவே வாகனத் தகடுகளை தபால் மூலம் விநியோகிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago
4 hours ago
5 hours ago