Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
S.Renuka / 2025 மார்ச் 20 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
பணிநீக்கம் செய்யப்படாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படைகளைச் சேர்ந்த சுமார் 1,600 க்கும் மேற்பட்ட வீரர்கள் புதன்கிழமை (19) அன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் (ஓய்வு பெற்ற) சம்பத் துயகொண்டாவின் உத்தரவைத் தொடர்ந்து, சட்டரீதியாக இராஜினாமா செய்யாமல் பணியில் இருந்து தப்பிச் சென்ற முப்படையினரை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட நிலையில், சுமார் 1,604 இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில், முப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கைகளில் 1,444 பேர் கைது செய்யப்பட்டதாகவும், 160 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர்களில் 1,394 பேர் இராணுவ வீரர்கள், 138 பேர் விமானப்படை வீரர்கள் மற்றும் 72 பேர் கடற்படை வீரர்கள் என பாதுகாப்பு அமைச்சகம் மேலும் தெரிவித்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
36 minute ago
37 minute ago
42 minute ago