Janu / 2026 மே 13 , பி.ப. 01:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழக முதல்வர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் நியமிக்கப்பட்ட உத்தரவை தமிழக அரசு அதிரடியாகத் திரும்பப் பெற்றுள்ளது. விஜய்யின் ஆஸ்தான ஜோதிடருக்கு ஏன் அரசுப் பதவி வழங்கப்பட்டது என விசிக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான விமர்சனங்களை முன்வைத்த நிலையில், இந்த உத்தரவு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
முதல்வரின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக ரிக்கி ராதன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து, அரசின் முதன்மைச் செயலாளர் முன்னதாக உத்தரவிட்டிருந்தார். ரிக்கி ராதன் பண்டிட், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) செய்தித் தொடர்பாளராகவும், கடந்த 7 ஆண்டுகளாக விஜய்க்கு ஜோதிட ரீதியான ஆலோசனைகளை வழங்கி வருபவராகவும் அறியப்படுகிறார். இவர் முன்னதாக மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கும் ஆலோசகராக இருந்துள்ளார்.
விஜய்யின் ஒவ்வொரு அரசியல் நகர்வுகளையும் ஜோதிட ரீதியாக இவரே கட்டமைத்ததாகச் சொல்லப்படும் நிலையில், நேற்று இவருக்கு அரசுப் பதவி வழங்கப்பட்டது. இதற்குப் பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்தன.
கட்சித் தலைவர்களின் கண்டனம்:
விஜய்யின் பதில்:
சட்டப்பேரவையில் தமிழக அரசு கொண்டு வந்த நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது பேசிய விசிக வன்னியரசு உள்ளிட்டோர், மூடநம்பிக்கைகளை ஒழிக்க வேண்டும் என வலியுறுத்தினர். இதற்கெல்லாம் பதிலளித்து உரையாற்றிய முதல்வர் விஜய், "ராதன் பண்டிட்டின் நியமனத்தை அரசு மறுபரிசீலனை செய்யும்," எனத் தெரிவித்தார்.
அதன்படி, தற்போது அந்தப் பணி நியமன உத்தரவு அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் விஜய் தலைமையிலான அரசு, ஒரு முக்கிய முடிவை அறிவித்துவிட்டு, எதிர்ப்புகளின் காரணமாக முதல்முறையாக அதனைப் பின்வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று நடைப்பெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில், 144 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு பெரும்பான்மையை நிரூபித்து, தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்டது.

29 minute ago
50 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
50 minute ago
2 hours ago