2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

தெமட்டகொட ருவானின்‌ சொத்தை கைப்பற்றியது CID

Editorial   / 2025 ஓகஸ்ட் 22 , மு.ப. 09:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் உறுப்பினரான தெமட்டகொட ருவானுக்குச் சொந்தமான சுமார் 100 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள ஐந்து மாடிக் கட்டிடத்தை குற்றப் புலனாய்வுத் துறை (CID) கைப்பற்றியுள்ளது. போதைப்பொருள் கடத்தலில் இருந்து சம்பாதித்த பணத்தில் தெமட்டகொட ருவான் இந்தக் கட்டிடத்தை வாங்கியது தெரியவந்ததை அடுத்து, அந்தக் கட்டிடத்தை CIDயின் சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) கைப்பற்றியது. சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக தெமட்டகொட ருவான், அவரது மனைவி, அவரது சகோதரி மற்றும் அவரது மகன் மீது சட்டவிரோதமாகச் சொத்து சேர்த்ததாக சட்டவிரோத சொத்துக்கள் புலனாய்வுப் பிரிவு (IAD) முன்பு வழக்குப் பதிவு செய்திருந்தது. போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழு உறுப்பினர்களால் சட்டவிரோதமாகச் சம்பாதித்ததாகக் கூறப்படும் சொத்துக்கள் குறித்த நீண்டகால விசாரணைகள் காரணமாக அந்தக் கட்டிடம் செயல்படாமல் போனதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X