2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

முதல் நாள் வசூலில்: ’லியோ’வை முந்தியது ‘கூலி’

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , பி.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

‘லியோ’ படத்தின் முதல் நாள் வசூல் சாதனையை முறியடித்து ‘கூலி’ முதல் இடத்தினை பிடித்தது.

தமிழ் படங்களில் விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படம் முதல் நாளில் ரூ.148 கோடி வசூல் செய்தது. அதுவே தமிழ் படங்களில் முதல் நாளில் அதிக வசூல் செய்த படம் என்ற சாதனையையும் படைத்தது. தற்போது அந்தச் சாதனையை முறியடித்திருக்கிறது ‘கூலி’. முதல் நாளில் ரூ.151 கோடி வசூல் செய்திருப்பதாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.

‘லியோ’ மற்றும் ‘கூலி’ ஆகிய இரண்டு படங்களுமே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவானவை என்பது குறிப்பிடத்தக்கது. கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், வரும் வார இறுதிநாட்களில் ‘கூலி’ பெரிய வசூல் சாதனையை படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .