2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சாதனைப் படைக்கும் மகாவதார் நரசிம்மா

Editorial   / 2025 ஓகஸ்ட் 15 , மு.ப. 11:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த அனிமேஷன் படம் ஜூலை 25-ல் வெளியானது.

தெலுங்கு, இந்தியில் வரவேற்பைப் பெற்ற இந்தப் படம் வசூலில் சாதனைப் படைத்து வந்தது. இந்நிலையில் இந்தியில் மட்டும் இதுவரை ரூ.100 கோடிக்கு மேல் இந்தப் படம் வசூலித்துள்ளது.

இந்தியில் ஒரு அனிமேஷன் படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலிப்பது இதுதான் முதன்முறை. மற்ற மொழிகளிலும் சேர்த்து இந்தப் படம் ரூ.210 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .