Editorial / 2022 ஏப்ரல் 09 , பி.ப. 02:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதியான கணவனை பரோலில் விடுதலை செய்யக்கோரி மனைவி உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில், கணவனிற்கு 15 நாள் பரோல் வழங்கப்பட்டுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்த நந்தலால் கொலை குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ளார். அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் கடந்த சில ஆண்டுகளாக சிறையில் உள்ளார். நந்தலாலுக்கு திருமணமாகி ரேகா என்ற மனைவி உள்ளார்.
இதற்கிடையில், கணவருடன் தாம்பத்ய உறவில் ஈடுபடவும், குழந்தை பெற்றுக்கொள்ளவும் அவரை பரோலில் விடுதலை செய்ய வேண்டும் நந்தலாலின் மனைவி ராஜஸ்தான் ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த ராஜஸ்தான் ஐகோர்ட்டு, சிறையில் உள்ள ஆயுள் கைதியின் மனைவி பெற்றுக்கொள்ள உரிமை உள்ளதாலும், அவர் எந்த குற்றங்களையும் செய்ய என்பதும், மேலும் தண்டனை பெற்ற குற்றவாளியை மனைவியுடன் குழந்தை பெற்றெடுக்க தாம்பத்ய உறவில் ஈடுபடவிடாமல் தடுப்பது அந்த மனைவியின் உரிமையை மோசமாக பாதிக்கும்’ என கூறியது. மேலும், மனைவியுடன் தாம்பத்ய உறவில் ஈடுபட ஆயுள் தண்டனை கைதி நந்த லாலுவுக்கு 15 நாட்கள் பரோல் வழங்கி கோர்ட்டு உத்தரவிட்டது.
2 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
5 hours ago
6 hours ago