2026 ஜனவரி 16, வெள்ளிக்கிழமை

தம்பலகாமத்தில் பட்டிப் பொங்கல்

Editorial   / 2026 ஜனவரி 16 , பி.ப. 03:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஏ.எச். ஹஸ்பர்

தமிழர்களின் தைத்திருநாள் தைப்பொங்கலை முன்னிட்டு மறு நாள் பட்டிப் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு  பட்டிப் பொங்கல் நிகழ்வு தம்பலகாமத்தில் வௌ்ளிக்கிழமை (16)  இடம் பெற்றது.

மாடுகளை குளிப்பாட்டி விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன் மாடுகளுக்கு அதனுடைய கொம்புகள் மற்றும் நெற்றியில் பொட்டு வைக்கப்பட்டு பலகாரமும் பகிரப்பட்டு மாடுகள் அலங்கரிக்கப்பட்டது. தமிழர்களின் பாரம்பரியத்தை பரைசாற்றும் இப் பட்டிப்பொங்கலானது உழவர்களின் நினைவாக எடுத்துக்காட்டப்ட்டு மாடுகளுக்கு நன்றி செலுத்துவதாகும் காணப்படுகிறது.

தம்பலகாமம் புதுக்குடியிருப்பு பகுதியில் குறித்த பட்டிப் பொங்கல் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X