Freelancer / 2026 ஏப்ரல் 24 , மு.ப. 08:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழகத்தில் இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வாக்களித்ததால், வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டியுள்ளது. அசம்பாவிதங்கள் எதுவுமின்றி வாக்குப்பதிவு அமைதியாக நடந்து முடிந்தது. வாக்கு எண்ணிக்கை மே 4 ஆம் திகதி நடைபெற உள்ளது.
இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்தபடி, தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 234 தொகுதிகளிலும் நேற்று ஒரே கட்டமாக நடைபெற்றது. 4,023 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். 14.59 லட்சம் முதல் தலைமுறை வாக்காளர்கள் உட்பட மொத்தம் 5.73 கோடி பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். இந்நிலையில், தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டிருந்த 75,064 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நேற்று காலை 7 மணிக்கு தொடங்கியது.
காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களித்தனர். வெயிலை தவிர்க்கும் விதமாக, காலை 7 மணிக்கே முதியோர்கள் அதிக அளவில் வாக்குச்சாவடிகளுக்கு வந்து வாக்குகளை செலுத்தினர். சக்கர நாற்காலி மூலம் முதியோர், மாற்றுத் திறனாளிகளை அழைத்துவர தன்னார்வலர்கள் உதவினர். நேற்று முகூர்த்த நாள் என்பதால் பல்வேறு பகுதிகளிலும் புதுமணத் தம்பதிகள் மணக்கோலத்தில் வந்து வாக்களித்தனர்.
காலை முதலே வாக்குப்பதிவு: விறுவிறுப்பாக நடைபெற்றது. காலை 9 மணிக்குள்ளாக 17.69 சதவீத வாக்குகளும், பிற்பகல் ஒரு மணிக்குள் 56.81 சதவீத வாக்குகளும் பதிவாகின. குறிப்பாக, இளைஞர்கள், பெண்கள் ஆர்வத்துடன் திரண்டு வந்து அதிக அளவில் வாக்களித்தனர். இதனால், தமிழகத்தில் வாக்குப்பதிவு 85 சதவீதத்தை தாண்டி பதிவாகியுள்ளது. (a)
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago
5 hours ago