2025 ஓகஸ்ட் 29, வெள்ளிக்கிழமை

தமிழக வெற்றி கழகத்தின் விநாயகர் சிலை வைரல்

Editorial   / 2025 ஓகஸ்ட் 28 , பி.ப. 04:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலகம் முழுவதும்   விநாயகர் சதுர்த்தி புதன்கிழமை (27) விமர்சையாக கொண்டாடப்பட்டது. இந்த நிலையில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜயை பிரதிபலிக்கும் வகையில் ஒரு விநாயகர் சிலை வைக்கப்பட்டது. அந்த விநாயகர் சிலை தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், முதல்வர் நாற்காலியில் அமர்ந்து கையெழுத்து போடுவது போன்று உருவாக்கப்பட்டுள்ளது.

அதன் சட்டை பையில் விஜய் புகைப்படம் இருந்தது. இந்த வித்தியாசமான விநாயகர் சிலைக்கு கற்பூரம் ஏற்றி ஆரத்தி காண்பித்து வழிபட்டுள்ளனர். பொலிஸ் தரப்பில் அந்த சிலைக்கு ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் முதல்வர் என்ற பெயர் பலகையை நீக்கி விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .