2025 ஓகஸ்ட் 24, ஞாயிற்றுக்கிழமை

தமிழக மீனவர்கள் 17 பேர் விடுதலை

Freelancer   / 2023 செப்டெம்பர் 27 , பி.ப. 03:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

பு.கஜிந்தன்
 
யாழ்ப்பாணம் நெடுந்தீவில் எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழக மீனவர்கள் 17 பேரும் இன்று (27) விடுதலை செய்யப்பட்டனர்.
 
இராமேஸ்வரம் - ஜெகதாப்பட்டினத்தை சேர்ந்த 17 மீனவர்களும் கடந்த 13ஆம் திகதி, நெடுந்தீவு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவேளை இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இதன்போது அவர்களது மூன்று விசைப் படகுகளும் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.
 
இந்நிலையில், இந்த வழக்கானது ஊர்காவற்துறை நீதிமன்ற நீதிவான் திரு.கஜநிதிபாலன் அவர்கள் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது.
 
இதன்போது மீனவர்கள் 17 பேரையும் 5 வருடங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்ட 18மாத சாதாரண சிறைத்தண்டனை என்ற அடிப்படையில், நிபந்தனையுடன் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டார்.
 
அத்துடன் உரிமை கோரிக்கை வழக்கின் பின்னர் கைப்பற்றப்பட்ட விசைப் படகுகளை விடுவிக்க மன்றில் தீர்மானிக்கப்பட்டதாக நீரியல் வள திணைக்களத்தின் யாழ்ப்பாண மாவட்ட உதவிப் பணிப்பாளர் ஜெ.சுதாகரன் தெரிவித்தார்.
 
 

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X