Editorial / 2023 ஏப்ரல் 18 , பி.ப. 06:37 - 0 - {{hitsCtrl.values.hits}}

தமிழ்நாட்டையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் கடலுக்கடியில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டுமென இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு திராவிட முன்னேற்ற கழகத்தின் பாராளுமன்ற உறுப்பினர், கலாநிதி வீராசாமி கடிதம் எழுதியுள்ளார்.
இந்த சுரங்கப்பாதை கடலுக்கு அடியில் தமிழ்நாட்டின் தென் பகுதியையும் இலங்கையின் தலைமன்னாரையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட வேண்டுமென அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பொருளாதார ரீதியில் இந்தியாவை மற்றும் இலங்கையை சாலை மூலம் இணைப்பதன் பயன் மிகப் பெரியதாகும் எனவும் இந்தியா, இலங்கையில் வாழும் மக்கள் இதன்மூலம் பாரிய நன்மையடைவார்கள் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்
இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு இடையே கடலுக்கு அடியில் முதலாவது சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
15 minute ago
50 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
50 minute ago
1 hours ago