2025 ஜூலை 05, சனிக்கிழமை

’தமிழ் மொழியைப் புறக்கணிக்கத் தீர்மானமில்லை’

Editorial   / 2019 டிசெம்பர் 27 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடைபெறவுள்ள 73ஆவது சுதந்திர நிகழ்வின்போது, சிங்கள மொழியில் மாத்திரமே தேசிய கீதம் இசைக்கப்படுமென்றும் தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட மாட்டாதென்றும், இதுவரையில் எந்தவித உத்தியோகபூர்வத் தீர்மானத்தையும் அ​ரசாங்கம் எடுக்கவில்லை என்று, அமைச்சர் டலஸ் அழகப்பெரு​ம தெரிவித்தார்.

மேலும், அரசாங்கத்தின் அனைத்துச் செயற்பாடுகளின் போதும், அனைத்தின மக்களையும் இணைத்துக்கொண்டே அரசாங்கத்தின் பயணம் தொடருமென்றும், அமைச்சர் கூறினார்.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள சுதந்திரதின நிகழ்வின்போது,  தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பது புறக்கணிக்கப்பட்டுள்ளதாக வெளியிடப்பட்டு வரும் செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .