2025 ஓகஸ்ட் 28, வியாழக்கிழமை

தமிழகத்தில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையர்கள் இருவர் பலி

George   / 2016 ஜூன் 01 , மு.ப. 09:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியா, தமிழகத்தில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இரண்டு இலங்கை பிரஜைகள் பலியாகியுள்ளனர்.

குறித்த இரண்டு இலங்கை பிரஜைகளும் பவானிசாகர் சீரங்கராயன் கரடு பகுதியில்  மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வான் ஒன்றுடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமைச் சேர்ந்த திலகன் (23) மற்றும் அவரது நண்பரான ரவி (29). ஆகிய இருவரும் இந்த விபத்தில் பலியாகியுள்ளனர்.

பெயிண்ட் பூசும் தொழில் செய்யும் இவர்கள் இருவரும் வேலைக்கு சென்றுவிட்டு சென்றுவிட்டு பவானிசாகர் நோக்கி பயணித்த போது, இந்த விபத்து சம்பவித்துள்ளது.

சம்பவ இடத்திலேயே திலகன் உயிரிழந்ததுடன் ரவி, மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார்.
வான் சாரதியை கைதுசெய்ய தமிழக் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .