Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 நவம்பர் 23 , மு.ப. 07:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்மிரர் இணையத்தளத்தின் வாசகர்கள், தமிழ்மிரர் முகநூலில் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.
இதனூடாக இலங்கை வரலாற்றில் முகநூலில் மிகவும் குறுகிய காலத்திற்குள் எட்டு இலட்சத்துக்கும் அதிகமான விருப்பத்தை கொண்டிருக்கின்ற தமிழ் இணையத்தளமாக இன்று நவம்பர் 23 ஆம் திகதி புதன் கிழமையுடன் தமிழ்மிரர் திகழ்கின்றது.
தமிழ்மிரர் இணையத்தளம், முகநூலில் ஒரு இலட்சம் பேரின் விருப்பத்தை 2013ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் 12ஆம் திகதி பெற்றிருந்தது. இரண்டு இலட்சம் பேரின் விருப்பத்தை மார்ச் மாதம் 19ஆம் திகதி பெற்றிருந்தது. மூன்று இலட்சம் பேரின் விருப்பத்தினை 2014ஆம் ஆண்டு ஜூன் 12ஆம் திகதி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.
நான்கு இலட்சம் விருப்பத்தை அதேயாண்டு செப்டெம்பர் 28ஆம் திகதியன்று கடந்தது. 2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26ஆம் திகதியன்று 5 இலட்சம் விருப்பத்தை கடந்ததுடன் ஆறு இலட்சத்து விருப்பத்தை அதேயாண்டு ஜூலை மாதம் 18ஆம் திகதியன்று கடந்தது. இவ்வாறான நிலையில் ஏழு இலட்சம் விருப்பங்களை 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ஆம் திகதியன்று கடந்தது.
இவ்வாறான ஆதரவுகளுடன் எட்டு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் விருப்பத்தை இன்று புதன்கிழமை (23) கடந்தது. இலட்சோப இலட்ச விருப்பங்களை தெரிவித்து, 'தமிழ்மிரர் முகநூல்' இலங்கையிலேயே முன்னணி இடத்தை பெறுவதற்காக தங்களுடைய ஒத்துழைப்பை நல்கிய உள்ளூர் மற்றும் கடல் கடந்த வாசகர்களுக்கும் தமிழ்மிரர் இணையத்தளத்தின் ஊடாகவும் விஜய நியூஸ்பேப்பர்ஸ் வெளியீடுகளின் ஊடாகவும் நன்றிகளை தெரிவித்து கொள்கின்றோம். (ஆர்)
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
6 hours ago