Editorial / 2026 ஜனவரி 05 , பி.ப. 03:08 - 0 - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரை எதிராக போராடியவர்களுக்கு எதிரான வழக்கு மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு விசாரணை மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் திங்கட்கிழமை (05) அன்று எடுத்துக் கொள்ளப்பட்டபோதே வழக்கு பெப்ரவரி 26ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. .
தையிட்டியில் அமைந்துள்ள சட்டவிரோத விகாரையான திஸ்ஸ விகாரைக்கு முன்பாக போராட்டம் நடத்தியபோது வேலன் சுவாமிகள் உள்ளிட்ட சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.
அவர்கள் சொந்தப் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், அந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கெள்ளப்பட்டு ஒத்திவைக்கப்பட்டது.
வேலன் சுவாமிகள் உள்ளிட்டோருக்காக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி ஸ்ரீகாந்தா உள்ளிட்டோர் ஆஜராகியிருந்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .