2025 செப்டெம்பர் 16, செவ்வாய்க்கிழமை

திருமணத்தில் மோதல்: ஒருவர் பலி; ஐவர் காயம்

Freelancer   / 2023 மார்ச் 18 , பி.ப. 02:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

பட்டகொட பிரதேசத்தில் இடம்பெற்ற திருமண வைபவம் ஒன்றில் ஏற்பட்ட கைகலப்பு மோதலில் முடிந்ததால் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், 5 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

திருமணத்தில் ஏற்பட்ட கைகலப்பைத் தொடர்ந்து பட்டகொட சந்தியில் வெள்ளி இரவு (17) இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். 

36 வயதுடைய உயிரிழந்தவரின் சடலம் சனிக்கிழமை (18) அதிகாலை பட்டகொட பிரதேசத்தில் உள்ள வயல்வெளியில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் காயமடைந்த இரு குழுக்களைச் சேர்ந்த 5 பேர் கொழும்பு, நாகொட மற்றும் ஹொரணை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்பதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X