Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Editorial / 2019 மே 04 , பி.ப. 08:05 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாடசாலைகளில், தரம் 1 முதல் 5 வரையான மாணவர்களுக்கான கல்வி நடவடிக்கைகள், எதிர்வரும் 6ஆம் திகதி ஆரம்பிக்கப்போவதில்லை என்றும், அவர்களுக்கான கல்வி நடவடிக்கைகளை, 13ஆம் திகதி ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இருப்பினும், தரம் 6 முதல் 13 வரையான மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள், 6ஆம் திகதி ஆரம்பிக்கப்படும் என்றும், பாடசாலை மாணவர்களுக்கான பாதுகாப்பு, உயரிய மட்டத்தில் வழங்கப்படும் என்றும், அரசாங்கம் அறிவித்துள்ளதாக, அரசாங்கத் தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதேவேளை, நாளை மறுதினம் பாடசாலைகள் திறக்கப்படவுள்ள நிலையில், கொழும்பிலுள்ள பாடசாலைகளில், இன்று (சனிக்கிழமை) விசேட சுற்றிவளைப்புகள் முன்னெடுக்கப்பட்டன.
அத்தோடு நாளை பகல் 1 மணிக்குப் பின்னர், பாடசாலைகளுக்கு அருகில் வாகனம் நிறுத்துவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று (21) இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுதாக்குதல்கள் காரணமாக, நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்திருந்தனர்.
அதனைத் தொடர்ந்து. மேலும் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டது.
நாட்டில் தொடர்ந்தும் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்ற போதிலும், ஓரளவு சுமூகமான நிலை ஏற்பட்டுள்ளது. நாளை மறுதினம் பாடசாலைகளைத் திறப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில், பாடசாலைகளில் விசேட சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
30 minute ago
30 minute ago
37 minute ago