Janu / 2026 ஜனவரி 19 , பி.ப. 01:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழுது கொண்டிருந்த தனது 2-1/2 மாத சிசுவை கையில் வைத்து ஆட்டிக்கொண்டிருந்த தந்தைக்கு ஏற்பட்ட தூக்க கலக்கத்தில் சிசு தரையில் விழுந்து தலை சிமெண்ட் தரையில் அடிபட்டதில் சிசு உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குறித்த தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அலுபோமுள்ள பிரதேசத்தைச் சேர்ந்த ருசேரி கெஷாயா என்ற சிசுவே இவ்வாறு உயிரிழந்துள்ளது.
தாயும் தந்தையும் மரண விசாரணை அதிகாரியிடம் ஆஜர்படுத்தப்பட்ட போது, மரணம் தொடர்பாக எந்த சந்தேகமும் இல்லை எனவும் சிசுக்கு எந்தத் தீங்கும் ஏற்படவில்லை எனவும் கூறியுள்ளனர்.
பின்னர் மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையின் போது சிசுவின் தலையின் வலது பக்கம் ஏற்பட்ட காயம் காரணமாக மூளையில் இரத்த உறைவு ஏற்பட்டதே மரணத்திற்கான காரணம் என அறிக்கையிடப்பட்டுள்ளது. அதற்கமைய உண்மையை மறைத்ததற்காக சிறுமியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .