2025 ஜூலை 19, சனிக்கிழமை

துறைமுகத்தில் ஒரு நாளைக்கு 5 கோடி ரூபாய் இழப்பு

Freelancer   / 2025 ஜனவரி 10 , மு.ப. 08:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை சுங்கத் திணைக்களத்தில் பொருட்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக துறைமுகத்தில் கொள்கலன் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக துறைமுகத்திற்கு நாளொன்றுக்கு சுமார் ஐந்து கோடிரூபாய் இழப்பு ஏற்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

துறைமுகத்திற்கு வெளியே ஒரே உரிமையின் கீழ் உள்ள மூன்று நிறுவனங்களால் சரக்கு கொள்கலன்களின் சுங்க ஆய்வுகள் தற்போது மேற்கொள்ளப்படுவதாகவும், இதன் விளைவாக பொருட்களை அகற்றுவதில் தாமதம் ஏற்படுவதாகவும் தலைவர் கூறினார்.

இந்தப் பொருட்களை அகற்றுவதற்கு துறைமுக அதிகாரசபையிடம் இடமும் வசதிகளும் இருந்தாலும், இந்த அனுமதிப் பணியை வேறொரு நிறுவனம் மேற்கொள்வதால் துறைமுகத்தின் அன்றாட வருவாய் இழக்கப்படுவதாகவும் அதிகாரி ஒருவர் கூறினார். R

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X