Mithuna / 2023 டிசெம்பர் 18 , பி.ப. 02:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
திருப்பூர் மாவட்டம் உடுமலையில் உள்ள ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களில் தலித் மக்கள், காலணிகள் அணியக்கூடாது என்ற சாதிய ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்படுவது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திருப்பூர் மாவட்டம் மடத்துவாக்கத்தில் உள்ள இந்த இரண்டு கிராமங்களில் தலித் மக்களை தாழ்வாக நடத்தும் குற்றம் தொடர்ந்து நடைபெறுவதாக கூறப்படுகிறது. தேநீர் கடைகளில் தலித் மக்களுக்கு மட்டும் பேப்பர் கப்புகளைப் பயன்படுத்துவது, ராஜாவூர் மற்றும் மைவாடி கிராமங்களுக்கு காலணிகள் அணிய தலித் மக்களுக்கு தடை விதிப்பது போன்ற தீண்டாமைக் குற்றங்கள் தொடர்ந்து நடந்துவருவதாகக் கூறப்படுகிறது.
திராவிடர் விடுதலைக் கழகம் மற்றும் தமிழ் புலிகள் கட்சியினர் அளித்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
இந்த ஒடுக்குமுறைகள் பல ஆண்டுகளாக இங்கு கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும் மீறுபவர்கள் மீது வன்முறைத் தாக்குதல்கள் நடைபெறும் எனவும் மக்கள் தெரிவிப்பதாக சிபிஎம் தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாவட்டச் செயலாளர் எம்.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
28 minute ago
41 minute ago
2 hours ago